2ஜி வழக்கு: டிச.,21ல் தீர்ப்பு | Maduraimani
Tuesday, December 11
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

2ஜி வழக்கு: டிச.,21ல் தீர்ப்பு

Tamil_News_large_1912151

புதுடில்லி:

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த ‛2ஜி’ ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்புகோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி சைனி, தீர்ப்புதேதி இன்று(டிச.,5) வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு வரும் டிச.,21ல் காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் என நீதிபதி சைனி அறிவித்துள்ளார். தீர்ப்பு எழுதும் பணி முடிவடைந்துவிட்டதாகவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *