‘2.ஓ’ ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Maduraimani
Wednesday, December 13
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

‘2.ஓ’ ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

03-1512274310-2-o

சென்னை :

ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக, அதிக பொருட்செலவில் தயாராகி வரும் படம் ‘2.O’. ஷங்கர், ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படம் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே படம் அன்றைய தினம் வெளிவராது என தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில், ‘2.O’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பேடு மேன்’ இந்தி படம் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் தகவல் மேலும் உறுதியாக இருந்தது. இருந்தாலும் 2.0 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா படம் வெளியீடு பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தது.
நேற்று 2.O பட வெளியீட்டைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி படம் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘2.ஓ’ படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *