3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

TH01NAXALMEETNATION

சத்தீஸ்கரில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவடா மாவட்டம் பெடாடாபா என்ற கிராமம் அருகே வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் நேற்று போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஒரு இடத்தில் மறைந்திருந்த நக்சலைட்கள் திடீரென வெடிகுண்டை வெடிக்கச் செய்து போலீஸார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். நக்சலைட்கள் சுட்டதில் மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் காயமடைந்தார். இதை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை குழு டிஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *