7 பெண்களை மணந்த போலீஸ் சஸ்பெண்ட் | Maduraimani
Friday, July 20
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

7 பெண்களை மணந்த போலீஸ் சஸ்பெண்ட்

1

தானே:

மும்பையில் முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த30 ஆண்டுகளாக மறைந்து 7 திருமணம் செய்த போலீஸ் கன்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூரியகாந்த் கதம்,37, தானே போலீஸ்நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுவாதி என்பவரும் கடந்த 1986-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு ரட்சிதா என்பவரை 1991-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்தார். பின்னர் இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் மேலும் 5 திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு சூரிய காந்த் வேறுஒரு பெண்ணுடன் செல்வதை இரண்டாவது மனைவி ரட்சிதா பார்த்துள்ளார். விசாரணையில் சூரியகாந்த் கதம் 7 பெண்களை மணந்தது அம்பலமானது.
இது குறித்து மன்பாடா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவருக்கு ஆதரவாக மற்ற 6 மனைவிகளும் புகார் கொடுத்ததையடுத்து உயர்அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *