‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வாயிலாக நாயகனாக உயர்ந்தார் நகைச்சுவை நடிகர் சந்தானம்.

சென்னை: ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வாயிலாக நாயகனாக உயர்ந்தார் நகைச்சுவை நடிகர் சந்தானம்.
படத்தின் வெற்றியை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சக்கப்போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.
இதனிடையில், கே7 ஸ்டூடியோஸ் சார்பில் விஜய் செல்லையா மற்றும் வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே. கணேஷ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். இந்தப் படம் டைம் லூப் சார்ந்த த்ரில்லர் கதையம்சம் கொண்டது. படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

More Stories
‘ஏழு கடல் ஏழு மலை’யில் புதிய உலகம்
நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’
“சினிமா கொடுத்த மனப்பக்குவம்”- ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி