
ஜூலி ஸ்வீட், பிராட் ஸ்மித், அலெக்சாண்டர் வாங்
Follow Us
இந்தியாவில் ஏஐ முதலீடு: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஏஐ முதலீட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் பிராட் ஸ்மித் டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.
புதிதாக தொழில் மயமாக்கப்பட்ட அல்லது வளரும் நாடுகளான தெற்குலக நாடுகளில் (குளோபல் சவுத்) வரும் 2030-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) விரிவுபடுத்துவதற்காக 50 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
ஆரம்பக் கல்வியில் ஏஐ பாடங்கள்: அசென்ச்சர் நிறுவனம் பாராட்டு
அசென்ச்சர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட் மாநாட்டில் பேசியதாவது: இந்தியாவில் தொடக்கப் பள்ளியில் தொடங்கி, கல்வித் துறையில் ஏஐ பாடங்களை கொண்டு வந்துள்ளதில் இந்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவைப் போலவே உலகெங்கிலும் உள்ள அரசுகள், இந்த முறையைப் பின்பற்ற வேண்டும். அப்போது ஏஐ நம்ப முடியாத அளவுக்கு வளர்ச்சியை எட்டும். இந்தியாவில் 3.5 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தி அசென்ச்சர் செயல்பட்டு வருகிறது.
ஏஐ கொண்டு வரப்பட்டதன் மூலம் கல்வி என்பது இனி ஒரு இலக்காக இருக்காது. நாம் நமது வாழ்நாள் முழுவதும் கற்றல் பணியைத் தொடர வேண்டும். நிறுவனங்களும் நாடுகளும் புதிய தொழில்நுட்பங்களை உற்பத்தித் திறனை அதிகரிக்க ஏஐ பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அரசு – தனியார் ஒத்துழைப்பு தேவை: மெட்டா நிறுவன அதிகாரி வலியுறுத்தல்
மெட்டா நிறுவன தலைமை அதிகாரி (செயற்கை நுண்ணறிவு) அலெக்சாண்டர் வாங் மாநாட்டில் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல அதன் கொள்கைகளைச் சரியாக செயல்படுத்துவதிலும், முதலீட்டைப் பெறுவதிலும் தீவிரம் காட்ட வேண்டும்.
ஏஐ தொழில்நுட்பத்தின் முழு திறனையும் வெளிப்படுத்த அரசுகள் – தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெரிய அளவில் தேவை. செயற்கை நுண்ணறிவு 4 முக்கிய பிரிவுகளான திறமை, ஆற்றல், தரவு, கம்ப்யூட்டிங் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்க வேண்டும்.
எனவே, அரசும், தனியார் துறையும் இந்தத் துறையில் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அலெக்சாண்டர் வாங் பேசினார்.

More Stories
“உலகுக்கு இந்தியா தலைமை வகிக்கும்” – டெல்லி மாநாட்டில் ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் புகழாரம்
ஏழைகளுக்கு மலிவு விலையில் டெல்லியில் 25 அடல் கேன்டீன்கள்