சென்னை: சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட பொது அறிவிப்பு: சென்னை பல்கலைக் கழகம் சார்பில் செயல்படுவதாகவோ அல்லது அதை பிரதிநிதிப்படுத்துவதாகவோ கூறிக்கொள்ளும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள், முகமைகள், நிறுவனங்கள் மற்றும் சேர்க்கை மையங்களுடன் பொதுமக்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.
இந்த விஷயத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சோளிங்கர் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் ஆஸ்கார் ஆன்லைன் அட்மிஷன் சென்டர் என்ற நிறுவனம், சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை மையம் அல்ல. எனவே, சென்னை பல்கலைக்கழக நேரடி மாணவர் சேர்க்கை, இணையவழி மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுமக்கள் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

More Stories
பிஎட், எம்எட் மாணவர் சேர்க்கைக்கு விவரம் சமர்ப்பிக்க அவகாசம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்
பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு