
புதுடெல்லி: வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அசாம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இவர்களை திருப்பி அனுப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு ஊடுருவல் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. எஸ்ஐஆர் பணியின் போது ஊடுருவல்காரர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களது பெயர் நீக்கப்படுகின்றன.
இந்நிலையில் வரும் 20-ம் தேதி அசாம் மாநிலத்தின் சசார் மாவட்டத்தில் உள்ள நதன்பூர் கிராமத்துக்கு அமைச்சர் அமித் ஷா வரும் 20-ம் தேதி செல்கிறார். இங்குதான் சட்டவிரோத குடியேறிகள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறுநாள் சர்வதேச எல்லைப் பகுதி அருகே அமைந்திருக்கும் நதன்பூர் கிராமத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பல்துறை மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்கிறார். இங்கு பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் அசாம் போலீஸார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

More Stories
மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் சரத் பவார்!
முதுமலை வனப் பகுதியில் வலம் வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு
அசாமில் அவசர காலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் லேண்ட் ஆகி திறந்துவைத்த மோடி!