November 25, 2026

அன்பில் மகேஸை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில், அன்பில் மகேஸ், முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேரையும் இன்று காலை 11 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் போலீஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.

தனியார் பள்​ளி​களுக்கு நிரந்​தர அங்​கீகாரம் உள்​ளிட்ட அனுமதி​களைப் பெற்​றுத்​தரு​வ​தாகக்​கூறி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேட்​டில் ஈடு​பட்​ட​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ், முன்​னாள் எம்​எல்ஏ முத்​துக்​குமார் மற்​றும் அவரது மேலா​ளரான சரவணன் ஆகியோரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

தற்​போது சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார், மீண்​டும் மூவரை​யும் ஒன்​றாக 2 நாட்​களுக்கு காவலில் எடுத்து விசா​ரணை நடத்த அனுமதி கோரி ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனு நீதிபதி எல்.எஸ்.சத்​தி​யமூர்த்தி முன்​பாக நேற்று விசாரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீஸார் தரப்​பில் ஆஜரான சிறப்பு வழக்​கறிஞர் 2 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரிக்க அனுமதி கோரினார். இந்த மனு மீது இன்று (நவ.25) உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும் என அறி​வித்து மூவரையும் ஆஜர்​படுத்த உத்​தர​விட்டார்.

இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ், முத்துக்குமார், சரவணன் ஆகிய 3 பேரையும் மீண்டும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி போலீஸுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி, இன்று காலை 11 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு, ஏற்கனவே விதித்த அனைத்து நிபந்தனைகளும் அடங்கும் என தெரிவித்துள்ளார்.

Spread the love