சியாட்டில்: அமெரிக்காவில் தற்போது இந்திய மாம்பழங்களின் மீதான ஆசை அதிகமாக உள்ளது. அல்போன்சா, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற பிரீமியம் ரக மாம்பழங்கள் கடைகளில் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்கின்றன.
இந்திய மாம்பழங்கள் கப்பல் அல்லது விமானம் மூலம் அனுப்பப்படுவதற்கு முன்பே முன்பதிவில் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. மேலும் சுமார் 12 மாம்பழங்கள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 60 டாலருக்கு (ரூ.5750) விற்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையுள்ள மாம்பழ பெட்டிகள் 1,000 டாலர் வரை விற்கப்படுகிறது. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இந்தியாவில் இருந்து மாம்பழங்கள் அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளன.
அமெரிக்காவுக்கு மெக்சிகோவில் இருந்தும் மாம்பழங்கள் அதிகம் வருகின்றன. ஆனால், அவை இந்திய மாம்பழ வகைகளின் ருசி, மணம் ஆகியவற்றுக்கு நிகராக இல்லை. அதனால் இந்திய மாம்பழ வகைகளுக்கு அங்கு அதிக வரவேற்பு உள்ளது.
அமெரிக்காவின் மாம்பழ பிரியர்களுக்கு, ஷர்மா என்பவரின் ‘இசட் இசட் மேங்கோ’ என்ற நிறுவனம் ‘மாம்பழ சீசன் பாஸ்’ வழங்குகிறது. இதற்காக 1,000 டாலர் செலவழிக்க அமெரிக்கர்கள் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு, சீசன் முடியும் வரை வாராந்திர மாம்பழப் பெட்டி அவர்களின் வீட்டு வாசலுக்கே விநியோகிக்கப்படுகின்றன.

More Stories
தங்கம் விலை இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.2400 குறைவு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,120 குறைவு: இன்றைய நிலவரம் என்ன?
ஈபிள் டவரை விட 40 மடங்கு அதிகமான இரும்பு கொண்டு கட்டப்பட்ட ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலை