சென்னை: மத்திய அரசை போல் தமிழக அரசும் அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று, முதல்வருக்கு என்ஜிஓ சங்கம் கோரிக்கை விடுத்துளளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் (என்ஜிஓ) மாநில தலைவர் த.அமிர்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்தவாறு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நலன் தொடர்ந்து காப்பாற்றப்படும் என்று முதல்வராக பதவியேற்ற போதும் தாங்கள் உறுதி அளித்துள்ளீர்கள்.
அந்த வகையில், தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதிய ஊழியர்கள் ஆகியோருக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தி வழங்குமாறு கேட்டு்கொள்கிறோம்.
அகவிலைப்படி உயர்வை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அறிவிப்பு செய்தால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
சபாநாயகரை கைப்பிடித்து அமரவைக்கும் மரபு! – பேரவையில் குட்டிக் கதை சொன்ன முதல்வர் விஜய்
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி திட்டம் முறியடிப்பு: ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு
கதர் பார்ட்டி வாரிசு எம்.பி.க்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தி | உள்குத்து உளவாளி