மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியில் உள்ள அருள்மிகு பாண்டுரெங்கன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதன் முதல் நாள் இரவு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்று வணங்கி மகிழ்ந்த கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், இந்த மண்ணின் மைந்தர் சு.வெங்கடேசன் கோவிலின் திருப்பணியின் பெரும் கொடையாளர், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளித் தாளாளர், இந்த மண்ணின் மைந்தர் ஆர் கே. சேதுராமன் தம்பதியர்.
ஏராளமான பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அறங்காவலர் ரெ. ராஜேஷ் மற்றும் ஆன்மீகப் பெருமக்கள் இதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
சர்வசாதகம் கூடலழகர் திருக்கோவில் கே. ஸ்ரீ நிவாசன் என்ற சுரேஷ் பட்டர் குழுவினர்.
கோவில் பூசாரி பி. நாராயணசாமி அர்ச்சகர் பி. அழகர் ராஜா.
ஹார்வி மக்கள் நல மையம் தலைவர் கே. செல்வராஜ், பட்டேல், ராஜேந்திரன், ஜி. அய்யல்ராஜ், அ. அரவிந்தன், சந்தான கிருஷ்ணன், சேகர், கணபதி, துர்காராம், பாலகிருஷ்ணன், சுப்புராம் உள்ளிட்ட நண்பர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இந்தப் பகுதியின் தொன்மையான கோவில் இது.
வாழிய இறைப்பணி வாழியவே.


More Stories
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று(07.03.2026)
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகைதந்த
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தடுப்புச் சுவர் மற்றும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை துவக்கி வைத்த புகைப்படம் 7-3-2026