February 7, 2026

அல் பலா பல்கலை. தாளாளர் மோசடி வழக்கில் கைது

அல் பலா பல்கலை.

அல் பலா பல்கலை.

புதுடெல்லி: கடந்த ஆண்டு டெல்லி செங்​கோட்டை அருகே நடந்த கார் குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் தொடர்​புடைய சில மருத்துவர்கள் ஹரியனா அல் பலா பல்​கலைக்​கழகத்​துடன் தொடர்​பில் இருந்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதனைத் தொடர்ந்து நடத்​தப்​பட்ட தீவிர சோதனை​யில், பல்கலைக்கழகத்தின் நிதி முறை​கேடு​கள் மற்​றும் போலி ஆவணங்​கள் குறித்த உண்​மை​கள் வெளி வந்​தன.

இதுதொடர்​பாக அல்​-பலா பல்​கலைக்​கழகத்​தின் தாளாளர் ஜவாத் அகமது சித்​திகி மற்​றும் அல்​-பலாஹ் அறக்​கட்​டளை மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்நிலை​யில் சட்​ட ​விரோத பணப்​ பரி​மாற்ற ஜவாத் அகமது சித்திகி குற்​றச்​சாட்​டின் கீழ் அமலாக்​கத்​துறை அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீ​ஸா​ரால் நேற்று கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

பல்​கலைக்​கழகத்​துக்கு தேவை​யான யுஜிசி அங்​கீ​காரம் மற்​றும் என்​ஏஏசி தகு​திச்​ சான்​றிதழ் இருப்​ப​தாகப் பொய்​யான தகவல்களைக் கூறி மாணவர்​களிடம் இருந்து பல கோடி ரூபாய் கட்​ட​ண​மாகப் பெற்று ஏமாற்​றிய​தாக இவர் மீது குற்​றம் சாட்டப்பட்​டுள்​ளது. சுமார் ரூ.493 கோடி வரை மாணவர்​களிடம் இருந்து சட்​ட​ விரோத நிதி திரட்​டப்​பட்​டிருப்​ப​தாக அமலாக்கத்துறை குற்​றப்​ பத்​திரி​கை​யில் தெரி​வித்​துள்​ளது.

இந்த மோசடி வழக்​கில் தொடர்​புடைய சுமார் 140 கோடி ரூபாய் மதிப்​புள்ள நிலம் முடக்கப்பட்டுள்​ளது. கைது செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து ஜவாத் அகமது சித்​தி​கியை போலீ​ஸார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்​படுத்​தினர். அவரை 4 நாட்​கள் போலீஸ் காவலில் வைத்து வி​சா​ரிக்​க நீதிப​தி அனு​ம​தி வழங்கியுள்​ளார்​.

Spread the love