அமராவதி: ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென்னிந்திய மாநிலங்களில் கரோனா தொற்று தற்போது மெல்ல பரவி வருகிறது.
ஆந்திராவைப் பொறுத்தவரை கடப்பா மாவட்டத்தில் தான் இத்தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லூர், குண்டூர், ஓங்கோல், விசாகப்பட்டினம், காக்கிநாடா என மாநிலம் முழுவதும் தற்போது 22-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கடப்பாவில் மட்டுமே 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டூரில் 2 பேர், மற்ற மாவட்டங்களில் தலா ஒருவர் எனத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஓங்கோலில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் போன்றவை தொடர்ந்து இருந்தால் உடனடியாகக் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.

More Stories
‘நாங்கள் ஏழையாக வாழ வேண்டுமா?’ – பிஹார் எம்எல்ஏ மைதிலிக்கு ஆதரவாக கங்கனா கேள்வி
திருப்பதி பிரம்மோற்சவ விழா சர்வ தரிசனத்துக்கு 8 கி.மீ. தூரம் நடக்க வேண்டுமா? – பக்தர்கள் அதிருப்தி
‘பிரதமர், அவரது தாய் குறித்த பேச்சு தரக்குறைவானது’ – ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர்கள் கண்டனம்