July 30, 2026

 ஆயிரக்கணக்கான மக்களோடு உண்ணாவிரதம் இருப்போம் கோழிப்பண்ணை ஊர் போராட்ட குழுவினர் 

ஜூலை 30

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 4,மங்கலம் சாலை வார்டு எண் 38=39 ஆகிய இரண்டு வார்டுகளின் எல்லை பகுதியான கோழி பண்ணை பேருந்து நிலையம் மங்கலத்தில் இருந்து திருப்பூர் வரும் தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பிரதான சாலையான திருப்பூர் மங்கலம் சாலை கோழி பண்ணை பஸ் ஸ்டாப் அடுத்து இந்த சாலையில் சுமார் 400 மீட்டர் அளவிற்கு குப்பைகள் சாலையில் கொட்டப்பட்டு இரண்டு மாதங்களாக துர்நாற்றம் வீசி வந்த நிலையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று 29 ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர் நேற்று இரவோடு இரவாக பாதிக்கும் மேற்பட்ட குப்பைகளை அள்ளிய அதிகாரிகள் போராட்டக் குழுவினரிடம் இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்ட நிலையில் காலையில் ஆதரவு தெரிவிக்க வந்த பொது மக்களிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்துவிட்டு பின்பு குப்பை எடுக்க விட்டாலும் அல்லது மீண்டும் குப்பை வந்து கொட்டினாலும் உண்ணாவிரத போராட்டம் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நடைபெற இருப்பதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்…

Spread the love