June 13, 2026

இந்திய யு-19 அணியில் அன்வே திராவிட்

புதுடெல்லி: ராகுல் திராவிட்​டின் இளைய மகன் அன்வே திராவிட் இந்திய யு-19 அணிக்கு தேர்​வாகி​யுள்​ளார்.

இந்​தியா 19 வயதுக்கு உட்​பட்​டோருக்​கான கிரிக்​கெட் அணி இலங்கை​யில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடர் ஜூலை 4 முதல் 20 வரை நடை​பெறுகிறது.

இதில் ஒரு​நாள் போட்​டித் தொடருக்​கான யு-19 இந்​திய அணி​யில் ராகுல் திரா​விட்​டின் இளைய மகனான 17 வயதான அன்வே திராவிட் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அன்வே திரா​விட் கர்​நாடக யு-19 அணியை வழிநடத்தி வினு மன்​கட் டிராபி தொடரில் காலிறுதி வரை அழைத்​துச் சென்​றிருந்​தார். அந்​தத் தொடரில் 6 ஆட்டங்களில் விளை​யாடிய அன்வே திரா​விட் 220 ரன்​கள் குவித்து கவனம் ஈர்த்​திருந்​தார்.

Spread the love