சென்னை: ‘இந்து தமிழ் திசை’ சார்பில் சென்னையில் நாளை (அக். 25) மகளிர் திருவிழா நடைபெறவிருக்கிறது.
முற்றிலும் பெண்களுக்காக அசத்தலான போட்டிகள், பேச்சரங்கம், கலை நிகழ்ச்சி, பரிசுகளுடன் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பல்வேறு சிறப்புப் பகுதிகளில் ஒன்றான, ‘பெண் இன்று’ சார்பில், இந்த ஆண்டும் தூத்துக்குடி, கடலூர், மதுரை, வேலூர், கோவை ஆகிய நகரங்களில் மகளிர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அவற்றைத் தொடர்ந்து சென்னை, திருவான்மியூரில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மகளிர் திருவிழா நாளை நடக்கிறது.
காலை 9 மணிக்குத் தொடங்கும் இவ்விழா மாலை வரை நடைபெறும். இவ்விழாவில், காவல்துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் வே.வனிதா ஐ.பி.எஸ். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து உரையாற்றுகிறார்.
பின்னர், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். வாசகியருக்கு ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட கலகலப்பான பல்வேறு போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்குச் சிறப்புப் பரிசும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்படும்.
85 வருட பாரம்பரியம் மிக்க உதயம் இட்லி அரிசி, பருப்பு வகைகள் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்துகிறது.
மேலும், லலிதா ஜூவல்லரி, ஐஸ்வர்யா சாரீஸ், ரெபியூட் வாட்டர், மஹாத்ரி ஃபுட்ஸ், ஹெல்த் பாஸ்கெட், சத்யா ஏஜென்சீஸ், ருச்சி ஊறுகாய், அட்வென்சர் மீடியா ஹவுஸ், வர்த்தமானன் பதிப்பகம், சவுபாக்யா என்டர்பிரைசஸ், காட்டன் ஹவுஸ், டோம்ஸ் ஸ்டேஷனரி ஆகிய நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன.
இந்த நிகழ்ச்சியின் டிவைன் பார்ட்னர் கிரி, ஹெல்த் பார்ட்னர் ரெயின்போ சில்ரன்ஸ் ஹாஸ்பிடல்ஸ், வென்யூ பார்ட்னர் வேல்ஸ் பல்கலைக்கழகம் – திருவான்மியூர் வளாகம், பிவெரேஜ் பார்ட்னர் கோத்தாஸ் காபி.
மகளிர் திருவிழாவில் பங்கேற்கும் வாசகிகள் அனைவருக்கும் மதிய உணவும் நிச்சயப் பரிசும் உண்டு. மகளிர் திருவிழாவில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். ஆண்களுக்கு அனுமதி இல்லை. விழாவில் பங்கேற்க அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்கேற்க 9600038796 என்கிற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுங்கள்.

More Stories
“கருத்து சுதந்திரத்தை பறிக்கும் சர்வாதிகாரி முதல்வர் விஜய்” – செல்லூர் ராஜூ விமர்சனம்
மருது சகோதரர்களின் நினைவு நாள்: முதல்வர் விஜய் மற்றும் தலைவர்கள் புகழஞ்சலி
உடற்கல்வி இயக்குநர் காலியிடம் நிரப்பப்படும்: அரசு கல்லூரிகளில் விளையாட்டு மேம்பாடு குறித்து அமைச்சர் விளக்கம்