சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையில் வார்த்தை போர் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனிடையில் தனது பரப்புரைகளில் உதயநிதி காட்டி வரும் இபிஎஸ் புகைப்படம் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் தான் காண்பித்து வரும் புகைப்படத்தால் இபிஎஸ் ரொம்ப டென்ஷன் ஆகிறார் என பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சட்டப்பேரவை தேர்தலுக்கான உதயநிதி ஸ்டாலின் , எடப்பாடி பழனிசாமி பரப்புரை அரசியல் களத்தில் பெரும் பரப்பை கிளப்பியுள்ளது. இருவரும் மாறி மாறி வார்த்தைகளால் சீண்டி வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரைகளில் காட்டி வருவது இபிஎஸ்ஸுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரும் உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பாஜக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை மட்டும் தான் வைத்துள்ளது என்று கூறி, தனது பரப்புரைகள் அனைத்திலும் செங்கலை காண்பித்து பேசினார் உதயநிதி ஸ்டாலின். இது மக்களிடையே மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. அந்த வகையில் தற்போது சசிகலா காலில் விழுந்து எடப்பாடி பழனிசாமி பதவியை வாங்கினார் என்று கூறி, அது சம்பந்தமான புகைப்படங்களை காண்பித்து வருகிறார்.
போட்டோ காண்பிக்க சொல்லும் தொண்டர்கள்
சில பரப்புரைகளில் அவரிடம் தொண்டர்களே புகைப்படத்தை காமிக்குமாறு கேட்டு வருகின்றனர். உதயநிதியும் நானே மறந்தாலும், நீங்க விட மாட்டீங்கள்ள என சிரித்துக்கொண்டே இபிஎஸ் போட்டோவை காண்பித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஆர்.கே. நகர் வேட்பாளர் எபினேசரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினிடம், தொண்டர்கள் போட்டோ கேட்டு ஆரவாரம் செய்தனர். அதற்கு போட்டோ நான் காண்பிக்க மாட்டேன்.
எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆகிறார்
பெரிய தகராறு ஆகிருச்சு. அவரு ரொம்ப டென்ஷன் ஆகுறாரு. இனிமேல் போட்டோ வேண்டாம் என்றார். நீங்க ஆர்வத்துல காண்பிக்க சொல்றீங்க. நானும் காட்டிறேன். இப்போ வேர்ல்ட் பேமஸ் ஆகிருச்சு. அவர் என்னை இன்னும் கெட்ட வார்த்தைல மட்டும்தான் திட்டல. செத்து போயிருக்கனும் சொல்லிட்டாரு. இவரை முரட்டு அடிமைன்னு தான் சொன்னேன். இது கெட்ட வார்த்தையா என கேள்வி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.
இபிஎஸ் பதிலடி
நேத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குறது தப்பு இல்லைன்னு எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கார். ஆனால் காலில் விழுந்து முதலமைச்சர் பதவி வாங்கிட்டு நீ யாரு? நீயா என்னை முதல்வர் ஆக்குனன்னு கேட்டாரு. இந்த அனுபவமெல்லாம் எனக்கு கிடையாது என பேசியுள்ளார். அவருடைய இந்த பரப்புரை தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. மற்றொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு இபிஎஸ் கொடுத்து வரும் பதிலடிகளும் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஒரேயொரு பிரச்சனை தான்.. 72 நாள் ஆளை காணோம்… தவெக விஜய்யை விளாசிய எடப்பாடி பழனிசாமி
சசிகலா பரப்புரை
இதனிடையில் அஇபுதமமுக சசிகலா ராஜபாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட சமயத்தில், உதயநிதி ஸ்டாலின் காட்டிய புகைப்படம் உண்மைதான. அதுக்கு போய் அந்த பையனை நீ உயிரோட இருந்திருக்கக் கூடாதுன்னு சொல்லலாமா? பதவி கொடுத்தவங்களுக்கு உண்மையாக இருந்திருக்கனும். ஒரு நாயக் குட்டிக்கு பிஸ்கட் போட்டால் கூட அது உண்மையாக இருக்கும். நீங்கள் செய்ததை அவர் காட்டுவது என்ன தவறு என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஓபிஎஸ் விமர்சனம்
புதிதாக கட்சி துவங்கி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பரப்புரையில் ஈடுபட்டு வரும் சசிகலா, முதல்வராக்கிய தன்னையே நன்றி இல்லாமல் கட்சியை விட்டு நீக்கி விட்டதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதே போல் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோரும் இபிஎஸ்ஸை துரோகி என பரப்புரைகளில் பேசி வருகின்றனர். இப்படி அதிமுகவில் இருந்து சென்றவர்கள் தன்மீது வைக்கும் விமர்சனங்களை சமாளிப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
“234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” – முதல்வர் ஸ்டாலின்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விமல், தேர்தல் நடத்தும் அலுவலர் ஷோபா – விடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
புதுக்கோட்டை