June 13, 2026

இனி இதுபோன்று நடக்காது: சர்ச்சைகளை கிளப்பிய சிங்கப்பெண் ஏஐ வீடியோ – அமைச்சர் ராஜ்மோகன் அளித்த உத்தரவாதம்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தின் ஏஐ வீடியோ சர்ச்சைகளை கிளப்பியது. இதில் எழுத்துப்பிழை இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்த்து. இந்நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தில் கையெழுத்திட்டார் ஜோசப் விஜய். இதனையடுத்து இந்த திட்டம் துவங்குவது தள்ளிப்போய் வந்த நிலையில், சமீபத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பெண் சிறப்பு படை ஆரம்பிக்கப்பட்ட சமயத்திலே சர்ச்சைகளை கிளப்பியது. இதுக்குறித்து தற்போது தவெக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் துவங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக இத்திட்டம் செயல்பட உள்ளது. இதனிடையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படை துவங்கி வைக்கும் போது, அத்திட்டம் குறித்தான ஏஐ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

  

by Taboola

Sponsored Links

You May Like

Network at Biggest Startup Summit in CoimbatoreGlobal Startups Club

அதில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதற்கிடையில் இந்த வீடியோவில் பல இடங்களில் எழுத்துப்பிழை இருந்ததாக கடுமையான சர்ச்சைகள் எழுந்தது. ஒரு அரசாங்கத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டும் ஏஐ வீடியோவில் எழுத்துப்பிழை இருப்பதை கூட கவனிக்காமல் வெளியிடுவதா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.

குறிப்பாக இலட்சினையில் உள்ள எழுத்துக்கள் கூட பிழையாக இருந்தது. இதனை யாருமே கவனிக்கவில்லையா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தது. இப்படியாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் துவங்கப்பட்ட சமயத்திலே சர்ச்சைகளில் சிக்கியது. இது சம்பந்தமாக கடந்த சில நாட்களாகவே இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது செய்தியாளர்களை சந்தித்த ராஜ்மோகனிடம், தமிழ் மொழியில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடிய சூழலில் நேற்றைய சிங்கப்பெண் திட்டத்துக்காக ஏஐ வீடியோ போடப்பட்டு இருந்தது. அதில் நிறைய இடங்களில் எழுத்து பிழை இருந்துள்ளது. இதனை கவனக்குறைவு என்று எடுத்து கொள்ளலாமா என்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் முன்வைத்தார். அதோடு இது அதிகாரிகளின் கவனக்குறைவா அல்லது அமைச்சர்களிடம் இவையெல்லாம் ஒரு கிராஸ் செக்கிற்கு கூட வருவது இல்லையா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராஜ்மோகன், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் துறையிடம் பேசினோம். இது ஏஐ செய்த பிழை. மனிதர்களால் உண்டான தவறு கிடையாது. இருந்தாலும் இனிமேல் இதுபோன்று ஏஐ மூலமாக வெளியாகும் அனைத்தும் தமிழ் வளர்ச்சி துறையிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். அதன் பிறகே வெளியிட வேண்டுமென ஆலோசனையை அளித்து இருக்கிறோம். இனி இது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்வோம் என உத்தரவாதம் அளித்துள்ளார் ராஜ்மோகன்.

கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் சென்னை முழுவதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை மேம்படுத்தும் விதமாக இந்த திட்டம் செயல்பட உள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் புகார் அளிக்க 100 என்ற காவல் உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மக்களிடையே விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசிக் முகமது

ஆசிரியர் பற்றிஆசிக் முகமதுஆசிக் முகமது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் இணையதளத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவர் சினிமா, சின்னத்திரை, வர்த்தகம் மற்றும் அரசியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதுகிறார். ஊடகத்துறையில் ஆறு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர் முன்னதாக கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா மற்றும் நடப்பு அரசியல், மக்கள் பிரச்சனைகள் பற்றிய கட்டுரைகளை சுவாரஸ்யமாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும்படியாகவும் எழுதி வருகிறார். specialization: சினிமா – சின்னத்திரை – செய்திகள்… மேலும் படிக்க

உரையாடலை தொடங்குகமெண்ட் 

Spread the love