நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், உயர்திரு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாமக்கல் வடக்கு திரு.M.பதுவை நாதன் அவர்களின் தலைமையில் இராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.A.செல்வகுமார் அவர்கள் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டார்.
தணிக்கையின் போது விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்த இரண்டு தனியார் தடப் பேருந்துகள்
1. TN63AQ4179(RMR BUS)
2. TN30AP7080(MKS BUS) ஆகிய இரண்டு பேருந்துகள் மீது அதிக பயணச்சீட்டு கட்டணம் வசூலித்ததற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது,
மேலும், இனிவரும் காலங்களில் தனியார் தடப் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட பயண கட்டணத்தை விட கூடுதலாக பயண கட்டணம் வசூலித்தால் அப்பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் M.பதுவை நாதன் நாமக்கல் வடக்கு அவர்கள் தெரிவித்துள்ளார்

More Stories
09-07-2026
09-07-2026
09-07-2026