September 23, 2026

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் தேர்தல் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. காதர் பாட்சா முத்துராமலிங்கம் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் பெண்கள் நிர்வாகிகள் இணைந்து முகமது காசி அப்பா தர்கா, பட்டாணியப்பா தர்கா உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடான பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

 “திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் உதயசூரியன் சின்னத்திற்கே எங்கள் வாக்கு” என உறுதியளித்தனர். 

இந்த நிகழ்வு கீழக்கரை பகுதியில் தேர்தல் சூழலை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Spread the love