March 24, 2026

ஈரானுக்கு பணம், தங்கம் நன்கொடை வழங்கிய காஷ்மீரிகள்

ஸ்ரீநகர்: போ​ரால் பாதிக்​கப்​பட்​டுள்ள ஈரானுக்கு காஷ்மீர் மக்​கள் பணம் முதல் தங்​கம் வரை தாராள​மாக நன்கொடை வழங்கி உள்​ளனர். மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர்ச் சூழலால் பாதிக்​கப்​பட்​டுள்ள ஈரான் மக்களுக்கு ஆதர​வாக, காஷ்மீரின் பட்​காம் மற்​றும் பாரமுல்லா மாவட்​டங்​களைச் சேர்ந்த மக்​கள் மனிதாபிமான அடிப்​படை​யில் உதவி வழங்​கத் தொடங்கியுள்​ளனர்.

ஈகைத் திரு​நாள் (ரம்​ஜான்) கொண்​டாட்​டங்​களைத் தொடர்ந்​து, ஷியா பிரிவு மக்​கள் அதி​கம் வாழும் பகு​தி​களில் தன்​னார்​வலர்​கள் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்​களைச் சேகரித்​தனர். அப்​போது மக்​கள் பணமாக மட்​டுமல்​லாமல், தங்​கம் மற்​றும் வெள்ளி நகைகள், கால்​நடைகள் மற்​றும் பாரம்​பரிய செப்​புப் பாத்​திரங்​களை​யும் நன்​கொடை​யாக வழங்​கினர்.

ஈரான் தூதரகம் நன்றி

இந்​தி​யா​வுக்​கான ஈரான் தூதரகம் இதுகுறித்த புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோக்​களை சமூக ஊடகங்​களில் பகிர்ந்துள்​ளது. ஈரானை மீண்​டும் கட்​டி​யெழுப்​புவதற்​காக பணம் மற்​றும் நகைகளை வழங்​கிய இந்​தி​யர்​களின் ‘அன்பு’ மற்​றும் ‘மனி​தாபி​மானத்​துக்​கு’ அந்​நாட்டு தூதரகம் நன்றி தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து ஈரான் தூதரக எக்ஸ் பக்​கத்​தில், ‘‘நன்​றி​யால் நிறைந்த இதயங்​களு​டன், காஷ்மீரின் அன்​பான மக்​கள் தங்​களின் மனி​தாபி​மான ஆதரவு மற்​றும் மனப்​பூர்​வ​மான ஒற்​றுமை​யின் மூலம் ஈரான் மக்​களு​டன் உறு​துணை​யாக நிற்​ப​தற்கு நாங்​கள் மனமார்ந்த நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம்; இந்த அன்பு ஒரு​போதும் மறக்​கப்​ப​டாது. நன்​றி, இந்​தி​யா” என பதி​விடப்​பட்​டுஉள்​ளது.

ஆண்​கள், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் என சமூகத்தின் அனைத்​துத் தரப்பு மக்​களும் இந்த பிரச்சாரத்தில் பங்​கேற்​றனர். பல பெண்​கள் தங்​களின் தனிப்​பட்ட தங்க நகைகளை​யும் மதிப்​புமிக்க வீட்டு உபயோகப் பொருட்​களை​யும் தான​மாக வழங்​கினர். குறிப்​பாக, காஷ்மீரைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண், மறைந்த தன் கணவரின் நினை​வாக 28 ஆண்​டு​களாகப் பாது​காத்து வந்த தங்க நினை​வுப் பதக்​கத்தை ஈரான் மக்களுக்​காக வழங்​கி​யுள்​ளார்.

இதுகுறித்து ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்​தில், “காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சகோ​தரி, 28 ஆண்​டு​களுக்கு முன்பு காலமான தனது கணவரின் நினைவாக வைத்​திருந்த தங்​கப் பதக்கத்​தை,ஈரான் மக்​கள் மீதான அன்பு மற்​றும் ஒற்றுமைக்​காக வழங்​கி​யுள்​ளார். உங்​களின் கண்ணீரும் தூய உணர்​வு​களும் ஈரான் மக்​களுக்கு மிகப்​பெரிய ஆறு​தலாகும். இது என்​றும்​ மறக்​கப்​ப​டாது’’ என கூறப்பட்டுள்ளது.

Spread the love