வாஷிங்டன: தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் நிகழ்ச்சியில் ஒரு பேட்டியில் அமெரிக்க துணை அதிபர் பேசுகையில் ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளைக் கெடுக்கவும், போரை காலவரையறிக்கையின்றி நீட்டிக்கவும் இஸ்ரேல் அரசின் சில பிரிவுகள் திட்டமிட்டு செயல்படுவதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியதால்தான், ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது. அதன் வழியாகப் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது உலக நாடுகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், ஈரானின் இந்தத் தாக்குதலைக் கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் தொடங்கியது. இப்படி ஈரான் போரின் முற்றுப்புள்ளி காற்புள்ளியாக மாறியது என்று அமெரிக்க துணை அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான அமைதி மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கையை சீர்குலைக்க, இஸ்ரேல் அரசாங்கத்தில் உள்ள சில நபர்கள் அமெரிக்க பொதுமக்களின் கருத்தைத் திசை திருப்ப முயல்வதாக வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பழமைவாத செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு, இஸ்ரேலால் நிதியளிக்கப்பட்ட ஒரு பிரசாரக் குழு ரகசியமாக பணம் கொடுத்துள்ளதாகவும், இந்த நடவடிக்கை அமெரிக்க தூதரக முயற்சிகளை முறியடிக்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

More Stories
கடந்த 2 மாதங்களில் படகுகள் கவிழ்ந்து 500 ரோஹிங்கியா அகதிகள் பலி: ஐ.நா கவலை
இந்தியர்களின் சட்டவிரோத அமெரிக்க குடியேற்றம்.. 69% அதிரடி சரிவு.. ட்ரம்ப் காரணமா?
ஒப்பந்தத்தில் இருந்து விலகிய ஈரான்… மிரட்டும் ட்ரம்ப்!