இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாள்.அவரது 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ட்விட்டரில் தன் கருத்துக்களை பதிவிட்டு இருக்கின்றார்
முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று. இதனைத்தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞர் பிறந்தநாளான இன்று சில உறுதிமொழிகளை அவர் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டது என்னவென்றால், இப்பொது வெற்றிவாய்ப்பை இழந்துள்ளோம்.ஆனாலும் உங்களுடைய ஆற்றல் என்னோடு மட்டுமல்லாமல் நீங்கள் உணர்வூட்டி வளர்த்த ஒவ்வொரு உடன்பிறப்புகளிடமும் உள்ளது. எனவே நான் உறுதியாக சொல்கின்றேன்.மீண்டும் வெற்றி சரிதத்தை எழுதுவோம். உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டில் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம் என உறுதிகொண்டார் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின்.

More Stories
முதல்வர் விஜய் பிரச்சாரம் தொழுப்பேடுக்கு மாற்றம்
22-09-2026
22-09-2026