ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், ஏஆர்பி கேம்ப் கால்வாயில் கடந்த ஜனவரி 29ம் தேதி அடையாளம் தெரியாத 6 வயது சிறுமியின் உடல் கரை ஒதுங்கியது. எடபல்லி போலீஸார் அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், அந்த சிறுமியின் புகைப்படத்தை பல ஊர்களுக்கு அனுப்பியதோடு, பல ஊர்களில், காவல் நிலையங்களில் போஸ்டர் அடித்தும் ஒட்டினர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர், எடபல்லி போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் சுதீர் என்பவருக்கு, மகாராஷ்டிராவில் உள்ள அவரது உறவினர்கள் போன் செய்தனர்.
அப்போது அவர்கள், இறந்து போன சிறுமியின் விவரங்களை எடுத்துக் கூறினார். இதனை தொடர்ந்து நிஜாமாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் கேரூர் பகுதியை சேர்ந்த பாண்டுரங்கா என்பவரும் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட ஆசைப்பட்டார். ஆனால், அவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளது. 3 பிள்ளைகளின் தகப்பன் என்பதால் தேர்தல் விதிமுறைகளின்படி போட்டியிட முடியாது என தானே தீர்மானம் செய்து, மூத்த மகளான பிராச்சியை (6) கொலை செய்து விடுவது என தீர்மானித்தார்.
Read More
அதன்படி, கடந்த மாதம் மகள் பிராச்சியை தனது பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு, சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ள தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்துக்கு வந்தார். அங்கு ஏஆர்பி கேம்ப் கால்வாயில் மகளை அடித்து தூக்கி போட்டுவிட்டு அதே பைக்கில் மீண்டும் தனது ஊருக்கு சென்று விட்டார்.
காயம் காரணமாக பிராச்சி கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது சடலம் சமீபத்தில் கரை ஒதுங்கியது. இதையடுத்து பிராச்சியின் தந்தை பாண்டுரங்காவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

More Stories
பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்!
“வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அறிவியல்-தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்” – ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்
மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம் பிப்.16-ல் திறப்பு