May 29, 2026

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா 35-வது சுற்று பேச்சுவார்த்தை

இந்​திய வெளி​யுறவுத் துறை இணை செய​லா​ளர் சுஜித் கோஷ் அருகில் சீனா வெளி​யுறவுத் துறை எல்லை விவ​கார இயக்​குநர் ஹு யான்சி

பெய்ஜிங்: எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக இந்​தி​யா, சீனா இடையே 35-வது சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்​கின் கல்​வான் பள்ளத் ​தாக்​கில் இந்​திய, சீன வீரர்​களிடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது. இதில் 20 இந்​திய வீரர்​கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவத்​தில் சுமார் 45 வீரர்​கள் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத் துறை தெரி​வித்​தது. கல்​வான் மோதலால் இந்​தி​யா, சீனா இடையே போர் பதற்​றம் எழுந்​தது.

எனினும் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளுக்​குப் பிறகு போர் பதற்​றம் தணிந்து இயல்பு நிலை திரும்​பியது. அப்​போது ​முதல் இரு தரப்பு இடையே எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இந்த வரிசையில் சீன தலைநகர் பெய்​ஜிங்​கில் நேற்று முன்​தினம் 35வது சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது.

இதில் இந்​திய வெளி​யுறவுத் துறை இணை செய​லா​ளர் சுஜித் கோஷ் தலை​மையி​லான குழு​வினர் பங்​கேற்​றனர். சீன தரப்​பில் அந்த நாட்டு வெளி​யுறவுத் துறை எல்லை விவ​கார இயக்​குநர் ஹுயான்சி தலை​மையி​லான குழு​வினர் பேச்​சு​வார்த்தை நடத்தினர்.

இது தொடர்​பாக இந்​திய வெளி​யுறவுத் துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “சீனா உடனான பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக அமைந்​தது. இரு நாடு​களின் எல்​லைப் பகு​தி​களின் தற்​போதைய நிலை குறித்து கூட்​டத்​தில் விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது. எல்லையில் அமை​தி, நல்​லிணக்​கத்தை பேணுவ​தில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றம் குறித்து இருதரப்​பிலும் முழு திருப்தி தெரிவிக்கப்பட்​டது.

எல்லை நிர்​ண​யம், எல்​லைப் பகுதி மேலாண்​மை, பரஸ்பர ஒருங்கிணைப்பை மேம்​படுத்த இருதரப்​பிலும் ஒப்​புக் கொள்ளப்பட்​டது. எல்லை விவ​காரங்​கள் தொடர்​பாக இரு நாடுகளின் ராணுவ அதி​காரி​கள் தொடர்​பில் இருக்க உறுதி மேற்கொள்​ளப்​பட்​டது” என கூறப்​பட்டுள்​ளது.

Spread the love