தில்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது

தில்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைது செய்யப்பட்டார்.
புதுதில்லியில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு, பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸார், மாநாட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் கிருஷ்யா ஹரி, பிகார் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் குந்தன் யாதவ், உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அஜய் குமார், இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரசிம்ம யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவரான உதய் பானு சிப்பும் கைது செய்யப்பட்டுள்ளார்.

More Stories
“உ.பி.யை இழிவுபடுத்தும் திமுகவுடன் சமாஜ்வாதி கட்சி கைகோத்துள்ளது” – பிரதமர் மோடி விமர்சனம்
ராணுவத்துக்கு அதிக செலவு: 5-வது இடத்தில் இந்தியா
மேற்கு வங்க தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 39.97% வாக்குப் பதிவு