September 18, 2026

ஏழு​மலை​யானுக்கு தினமும் 45 வகை நைவேத்தியங்கள்

திரு​மலை: திருப்பதி ஏழுமலையானுக்கு தின​மும் 45 வகை​யான நைவேத்தியங்கள் படைக்​கப்​படு​கின்​றன. அலங்​கார பிரிய​ரான திருப்பதி ஏழுமலையானுக்கு தின​மும் 20 வகை​யான அன்ன பிரசாதங்​களும், 25 வகை​யான பணி​யாரங்​களும் ஆகம சாஸ்​திர விதி​களின்​படி, நைவேத்​தி​யங்​களாகப் படைக்​கப்​படு​கின்​றன. அதி​காலை முதல் மணி அடித்த பின்​னர் முதலாவது நைவேத்தியம் படைக்​கப்​படு​கிறது.

இதில், முத்​கான்​னம் (நெய் பொங்​கல்), மாத்ரா அன்​னம், திந்​திரி நீர​ரான்​னம் (புளியோதரை), தத்​யோதனம் (தயிர் சாதம்), குடா அன்​னம் (சர்க்கரை பொங்​கல்), ஷாகா அன்​னம் (கதம்​பம் அன்னம்), சக்​கரா அன்​னம் (ரவா கேசரி) போன்​றவை சமர்ப்பிக்கப்​படு​கின்​றன. இவற்றுடன் தின​மும் 4 வகை பணியாரங்​களை​யும் நைவேத்​தி​யங்​களாகச் சமர்ப்​பிக்​கின்​றனர். இதில் லட்​டு, மாஷாப்​பம் (வடை), குடாப்​பம் (அப்​பம்), சக்​கரப்​பம் (தோசை) போன்​றவை முதல் மணி அடித்த பிறகு நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.

ராஜ​போகம்

சுவாமிக்கு 2-வது மணி அடித்த பின்​னர் படைக்​கப்​படும் நைவேத்​தி​யத்​துக்கு ‘ராஜ​போகம்’ என்று பெயர். இது மதிய நைவேத்​தி​யத்​தைக் குறிக்​கும். இதில், ஷுதான்​னம் (வெள்ளை சாதம்), புளியோதரை, சர்க்​கரை பொங்​கல், தயிர் சாதம், ஷீரா அன்​னம் அல்​லது ரவா கேசரி (சக்​க​ரான்​னம்) போன்​றவை மதி​யம் நைவேத்​தி​ய​மாகப் படைக்​கப்​படு​கின்​றன.

சயன போகம்

சயன போகம் என்​பது இரவு ஏகாந்த சேவைக்கு முன்​னர் 3-வது மணி அடித்த பின்​னர் சுவாமிக்​குப் படைக்​கப்​படும் நைவேத்​தி​ய​மாகும். இந்த சமயத்​தில் மிளகு அன்​னம், தோசை, லட்​டு, வடை, ரவா கேசரி போன்​றவை சயன போகம் என அழைக்கப்படுகின்றன.

சாயங்​கால ஆராதனை

தின​மும் சாயங்​கால ஆராதனை ஏழு​மலை​யானுக்கு நடத்​தப்​படு​கிறது. இந்த நேரத்​தில் கரு​வறையை (கர்ப்ப கிரகத்​தை) மீண்​டும் சுத்​தம் செய்​து, புது வகை மலர்​களால் அலங்​காரம் செய்​யப்​படு​கிறது. சிறப்பு கைங்​கர்​யங்​கள் நடத்​தப்​படு​கின்​றன. இரவு சயன போகத்​தில் நள்​ளிரவு ‘திரு​வீசம்’ எனும் சிறப்பு நைவேத்​தி​யம் படைக்​கப்​படு​கிறது. ‘திரு​வீசம்’ நடத்​தும்​போது, வெள்ளை அன்​னம் மற்​றும் வெல்​லத்​தில் தயாரித்த ருசி​யான சர்க்​கரை பொங்​கல் படைக்​கப்​படு​கிறது.

ஏகாந்த சேவை

ஏகாந்த சேவை​யின்​போது தின​மும், ஏழு​மலை​யானுக்கு இதமான சூட்​டில் பால், பழங்​கள், நெய்​யில் வறுத்த உலர் பழங்​கள் சமர்ப்​பிக்​கப்​படு​கின்​றன. ஒவ்​வொரு நைவேத்​தி​யத்​துக்கும் தனி பெயர், தயாரிக்​கப்​படும் முறை, சமர்ப்​பிக்​கப்​படும் நேரம் ஆகியவை முக்கி​யம். பக்​தர்​களுக்​குப் பிர​சாதங்​களாக வழங்​கப்​படும் லட்​டு, வடை, வெண் பொங்​கல், சர்க்​கரை பொங்​கல்​, தோசை போன்றவையே இதன்​ ருசிகளுக்​கு எடுத்துக்காட்டாகும்.

Spread the love