August 1, 2026

ஒட்டன்சத்திரத்தில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கம்.

ஒட்டன்சத்திரம் ஆகஸ்ட்.-1

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறை 

சார்பாக சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் மண்டபத்தில்  போக்குவரத்து ஆய்வாளர் காளீஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு  மோட்டார வாகன ஆய்வாளர் ப. ஈஸ்வரன், போக்குவரத்து காவல்துறை சார்பு ஆய்வாளர் கவிதா, முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் காளீஸ்வரன் பேசுகையில் ஆட்டோஓட்டுநர்கள் உரிய காலத்தில் காப்பீடு மற்றும் உரிமம் ஆகியவற்றை உரிய காலத்தில் புதுப்பித்து வைத்துக்கொள்ள வேண்டும் போக்குவரத்து காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள்

 ஆய்வு செய்யும்போது புதுப்பிக்காமல் இருக்கும் ஆவணங்களினால் உங்கள் வாழ்வாதாரமெல்லாம் பாதிக்கும்

சின்ன சின்ன வேலைகளை உரிய காலத்தில் புதுப்பித்து உங்களுடைய ஓட்டுனர் உரிமம் , வாகனத்தின் உரிமம் ,ஆயுள் காப்பீடு மற்றும் வாகன காப்பீடு இவற்றையெல்லாம் சரியாக வைத்திருந்தால் எங்களை கண்டு நீங்கள் ஒரு  போதும் பயப்பட தேவையில்லை  நாங்கள் உங்கள் நண்பன் .மேலும் நீங்கள் ஆட்டோவில் பயணம் செய்யும் போது நீங்கள் மட்டுமல்ல உங்களை நம்பி ஒரு குடும்பமோ ,இல்லை உங்களை நம்பி விலை மதிக்க முடியாத உயிர்களை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று பாதுகாப்பாக இறக்கி விடுவீர்கள் அதனால் நீங்களும் எங்களைப் போல் ஒரு பொறுப்புள்ள சீருடை பணியாளர்கள் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.மேலும் சாலை விதிகளை பொறுத்தவரை எங்களுடன் போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறை உள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தான் செயல்படுகின்றோம் எங்களுடைய பணி என்பது போக்குவரத்தை யாருக்காகவும் இடைஞ்சல் இல்லாமல் போக்குவரத்து சீராக்க வேண்டியது அதேபோல் நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்தில் சாலைகளில் ஏற்படக்கூடிய மேடு பள்ளங்கள் மற்றும் பாலங்கள் மற்றும் திருப்பங்கள் குறித்து எதுவெல்லாம் சரியாக இல்லையோ சாலை பணிகள் அதை அவர்களிடம் தெரிவித்தால் அவர்கள் சரி செய்து கொண்டு விடுவார்கள் மேலும் நகராட்சி துறை ஆக்கிரமிப்பு உள்ள இடங்களில் அவர்களுடைய ஒத்துழைப்பின் பேரில் ஆக்கிரமத்தை அகற்றிபோக்குவரத்தை சீர் செய்வது மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள் ஓட்டுநர்கள் மற்றும் வாகனத்தின் பதிவு உரிமம் மற்றும் காப்பீடு உரிமம் உள்ளவற்றை சரி பார்த்து மக்களுக்கு பாதுகாப்பாக பயணம் செய்ய உதவுவார்கள் எனவே பொதுமக்களும் இந்த சாலை பாதுகாப்பு வாரத்தை கடைபிடித்து விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்ற முழு ஒத்துழைப்பு நல்கும்படி ஓட்டுனராகிய உங்களையும் உங்களுடன் பணி புரியும் ஓட்டுநர் இல்லாத நண்பர்களுக்கும் சாலை விதிகளை புரிய வைத்து சாலை விதிகளை மதித்து கடைபிடிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார் இந்நிகழ்ச்சியை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் குமரேசன் தண்டபாணி குமார் சிவப்பிரகாசம் லட்சுமி உள்ளிட்ட200 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ,மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Spread the love