மதுராந்தகம்: கடப்பாக்கம் அடுத்த ஆலம்பரகுப்பம் மீனவர் பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்மப் பொருளை போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் அடுத்த ஆலம்பரகுப்பம் மீனவர் பகுதி கடற்கரையில் இரும்பாலான ராக்கெட் வடிவிலான மர்மப் பொருள் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது.
இதைப் பார்த்த, மீனவர்கள் உடனடியாக போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் மர்மப் பொருளை மீட்டு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் கரை ஒதுங்கிய மர்மப் பொருள் ஒத்திகைக்காக ஏவப்பட்ட ராக்கெட் அல்லது ஏதேனும் கப்பலின் உதிரிப் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும், முறையான பரிசோதனைக்கு பிறகே முழுமையான தகவல்கள் கிடைக்கும் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

More Stories
27-11-2026
ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு
“பல்கலை. துணைவேந்தர்களை தமிழக அரசே நேரடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- அன்புமணி