79 வயதான சோனியா காந்தி தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இவர் வயது
முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகிறது. ஏற்கனவே , கடந்த ஜனவரி மாதம் சுவாச பிரச்சினைகள் காரனமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த
நிலையில், நேற்று இரவு (மார்ச் 24) மீண்டும் டெல்லி கங்காராம் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான
ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய இருவரும் உடனடியாக
மருத்துவமனைக்கு விரைந்தனர்.தாயாரை சந்தித்து உடல் நலம் விசாரித்த ராகுல்
காந்தி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி… MAR 25, 2026 டெல்லி
Congress party leader Sonia Gandhi attends INDIA MEET press conference in Mumbai, India, 01 September, 2023. (Photo by Niharika Kulkarni/NurPhoto via Getty Images)

More Stories
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்: பாரத் பெட்ரோலியம்
மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் நெருக்கடி: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
‘ஏஐ’யால் வழக்கறிஞராக முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து