
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள் இஸ்லாமியர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே முஸ்லிம் மக்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்து குளித்து, நறுமணத் திரவியங்கள் பூசி, புதிய ஆடைகள் அணிந்து பள்ளிவாசல்களுக்கு திரண்டனர்.
பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். தொழுகையின் போது உலக அமைதி, மனித ஒற்றுமை மற்றும் நாட்டின் நலன் வேண்டி சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மக்கள் ஒருவருக்கொருவர் அன்போடு கட்டித்தழுவி பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் திருநாள் கொண்டாட்டக் களைகட்டியது.
பக்ரீத் திருநாளின் முக்கிய நிகழ்வான ‘குர்பானி’ வழிபாடும் நடைபெற்றது. இஸ்லாமிய மரபின்படி ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட பிராணிகள் அறுக்கப்பட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது. மேலும், குர்பானி இறைச்சி ஏழை, எளிய மக்களுக்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
கீழக்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எந்தவித அசம்பாவிதமும் இன்றி மக்கள் அமைதியான முறையில் திருநாளைக் கொண்டாடினர்.

More Stories
சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சிறப்பு செயற்குழு கூட்டம்
முன்னாள் 15 வேலம்பாளையம் நகர மன்ற தலைவர் எஸ்பி மணி நேரில் வாழ்த்து.