February 19, 2026

கீழக்கரை அன்பு நகரில் சகோதரத்துவ சங்கமம் – சமத்துவ பொங்கல் விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அன்பு நகரில் மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளை மற்றும் அன்பு நகர் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய சகோதரத்துவ சங்கமம் – சமத்துவ பொங்கல் விழா சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது. சங்க தலைவர் நசீர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ. உமர், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனி குமார், மாநில செயலாளர் காசிநாததுரை, கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபன், ரெட் கிராஸ் சேர்மன் மரு. சுந்தரம், பழைய குத்பா பள்ளி ஜமாஅத் பரிபாலனக் கமிட்டி செயலாளர் சப்ராஸ் நவாஸ், அன்பு நகர் முன்னேற்ற சங்க முன்னாள் செயலாளர் கலைச்செல்வன், 18 வாலிபர்கள் தர்கா ஜகாத் கமிட்டி பொருளாளர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர். சமத்துவமும் சகோதரத்துவமும் சமூகத்தின் உண்மையான செல்வம் எனக் குறிப்பிட்டனர். நிகழ்ச்சியை கீழை ஜஹாங்கீர் அரூஸி தொகுத்து வழங்கினார். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இறுதியாக அன்பு நகர் முன்னேற்ற சங்க பொருளாளர் செந்தில்நாதன் நன்றி உரை வழங்கினார். 

Spread the love