சென்னை: கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக கடந்த 20 நாட்களில் 200 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
முதல்வராக விஜய் பதவியேற்ற நாள் முதலே பலர் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
மேலும், டாஸ்மாக் நிர்வாகமும் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், ஆட்சி அமைத்து ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், கடந்த 20 நாட்களாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள், பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில் சோதனை நடத்தி 200 பணியாளர்களை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More Stories
ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு
கரு. பழனியப்பனின் `குக்கர்’.. படத்தின் தலைப்பை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்!
ஜூன் 18ல் சட்டமன்ற கூட்டத்தொடர்.. எம்எல்ஏ-கள் பயிற்சி முகாம்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!