பனாஜி: கோவா சட்டவிரோத இரும்புத் தாது சுரங்க ஊழல் வழக்கில், ‘சல்கோகர் குழுமம்’ (ஏவிஎஸ் குழுமம்) மற்றும் அதன் கூட்டாளிகளுக்குச் சொந்தமான ரூ.1,023.85 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இவை மறைந்த அனில் சல்கோகரின் எஸ்டேட் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களின் பெயர்களில் உள்ளன.
கோவாவில் 2007 முதல் புதிய குத்தகை வழங்கப்படும் வரை நடந்த சுரங்கப் பணிகள் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதன் அடிப்படையில் கோவா சிஐடி போலீஸார் பதிவு செய்த எப்ஐஆர் மூலம் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.
சல்கோகர் குழுமம் 2007- 12 கால கட்டத்தில் 10 சுரங்கங்களை சட்ட விரோதமாக இயக்கி ரூ.2,492.95 கோடி ஈட்டியுள்ளது. வெட்டப்பட்ட தாதுக்களை பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் (பிவிஐ) உள்ள போலி நிறுவனங்களுக்குக் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து சீனாவுக்கு மறுவிற்பனை செய்ததன் மூலம் மேலும் ரூ.2,744.89 கோடி லாபம் ஈட்டியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக ஈட்டப்பட்ட ரூ.5,237.84 கோடி குற்றப் பணம், சிங்கப்பூர் மற்றும் பிவிஐ போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டதோடு, ‘பங்கு மூல தனம்’ என்ற பெயரில் மீண்டும் இந்தியாவுக்குள்ளும் கொண்டு வரப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

More Stories
78 வயதிலும் ஜல யோகா செய்து ஆரோக்கியம் காக்கும் பாட்டி
பண்டைய வங்கமொழியின் வைஷ்ணவ பக்திப் பாடல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு
UPI & ATM மூலம் PF பணம்.. ரூ.5 லட்சமாக உயரும் வரம்பு விரைவில் வரப்போகும் EPFO 3.0