June 13, 2026

சபரிமலை கோயிலில் நெய் விற்பனை முறைகேடு: 4 வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

கொச்சி: கேரளா​வில் உள்ள சபரிமலை  தர்ம சாஸ்​தா (ஐயப்​பன்) கோயி​லில் விற்​பனை செய்​யப்​படும் அபிஷேக நெய்​யில், கடந்த 2025ம் ஆண்டு நவம்​பர் 17ம் தேதி முதல் 2025ம் ஆண்டு டிசம்​பர் 27ம் தேதிக்கு இடைப்​பட்ட காலத்​தில் நிதி முறை​கேடு நடந்​த​தாக புகார் எழுந்​தது.

குறிப்பாக கோயி​லில் பக்​தர்​களுக்கு விற்​பனை செய்​யப்​பட்ட 16,628 பாக்​கெட் நெய்​யில், திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு ஊழியர்​கள் 43 பேர் நிதி முறை​கேட்​டில் ஈடு​பட்​ட​தாக குற்றம்சாட்டப்​பட்​டது. நெய் பாக்​கெட்​டின் விற்​பனைத் தொகை திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு செலுத்​தப்​பட​வில்லை என்​றும், இதனால் ரூ.17 லட்​சத்​துக்​கும் அதி​க​மான இழப்பு ஏற்​பட்​ட​தாக​வும் கூறப்​பட்​டது.

இதையடுத்து திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்​டின் ஊழல் தடுப்புத்துறை அளித்த புகாரின் அடிப்​படை​யில், கேரள உயர் நீதிமன்​றம் தானாக முன்​வந்து உடனடி குற்​ற​வியல் விசாரணைக்கு உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில் இந்த வழக்கு தொடர்​பான விசா​ரணை கேரள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் வி.ராஜா விஜய​ராகவன், கே.​வி. ஜெயக்​கு​மார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள் கூறிய​தாவது: இது ஊழல் தடுப்பு சட்​டம் மற்​றும் பார​திய நியாய சம்​ஹிதா ஆகிய​வற்​றின் கீழ் குற்றங்​களாக பதிவு செய்​யப்​படும். குற்​றம்​சாட்​டப்​பட்ட நபர்களுக்கு எதி​ராக 1988-ம் ஆண்டு ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ், தண்​டனைக்​குரிய குற்​றங்​கள் ஏதேனும் நிரூபிக்கப்பட்டுள்ளனவா என்​பதை ஆராய்ந்​து, அந்த அறிக்கையை 4 வார காலத்​திற்​குள் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும்.

விசா​ரணை​யின் ​போது சேகரிக்​கப்​பட்ட ஆவணங்​கள் மற்​றும் தகவல்​களை அதி​காரி மூலம் சுதந்​திர​மாக மறு ஆய்வு செய்ய வேண்​டும் என்று கருதுகிறோம். இத்​தகைய சூழ்​நிலைகளில் இந்த விவ​காரத்தை வெறும் நிர்​வாக அலட்​சி​யம் அல்​லது குறை​பாடுள்ள பதிவேடு என்ற கண்​ணோட்​டத்​தில் மட்​டுமே பார்க்க முடி​யாது. விரி​வான வி​சா​ரணையை நடத்தி அதை அறிக்​கை​யாக தாக்​கல் செய்ய வேண்​டும் என்று உத்​தர​விடு​கிறோம்​. இவ்​வாறு நீதிப​தி​கள்​ தெரி​வித்​தனர்​.

Spread the love