November 24, 2026

சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: டிசம்பர் 19, 22, 27-ல் நடத்த ஏற்பாடு

சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வுக்கான பாடப்பிரிவு வாரியான தேதிகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது. தேர்வு டிசம்பர் 19, 22, 27 ஆகிய தேதிகளில் தினமும் இரு ஷிப்டுகளாக நடைபெறும்.

வாழ்வியல் அறிவியல், உயிரித் தொழில்நுட்பப் பாடங்களுக்கு டிசம்பர் 19-லும்; வேதியியல், நிலவியல், காலநிலை, கடலியல், விண்வெளி அறிவியல் பாடங்களுக்கு டிசம்பர் 22-லும் தேர்வு நடைபெறும். கணிதம் மற்றும் இயற்பியல் தேர்வுகள் டிசம்பர் 27-ல் நடைபெறுகின்றன.

Spread the love