November 27, 2026

சித்தா டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை, நவ. 26: மதுரை அரசு மருத்துவமனை, உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான டாக்டர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பொது சுகாதாரம், மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் சித்தா டாக்டர் மற்றும் பிற பணியாளர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ ஆலோசகர் (யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு) பணிக்கு பி.என்.ஒய்.எஸ். படிப்பும், 3 மருத்துவ அலுவலர்கள் (ஆயுஷ்) பணிக்கு பி.எஸ்.எம்.எஸ். படிப்பும் முடித்திருக்க வேண்டும். மாதத் தொகுப்பூதியம் ரூ.40 ஆயிரம். வயது 59க்குள் இருக்க வேண்டும். சிகிச்சை உதவியாளர், மருந்து வழங்குநர், முதுநிலை ஆய்வக நுட்புநர், ஆடியோலாஜிஸ்ட், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், எக்கோ டெக்னீசியன் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிகள் தற்காலிகமானவை. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமோ டிச. 7க்குள் ஒப்படைக்க வேண்டும்.

முகவரி: மாவட்ட செயற்செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை – 625 014.
தொலைபேசி: 0452-264 0778. 

Spread the love