October 15, 2026

சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தீவிரம்ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அ. செல்வம் நேரில் ஆய்வு

கரூர், அக் 15

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் குளத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அ. செல்வம், மாவட்ட ஆட்சியர் சி. முத்துக்குமரன், ஆகியோர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சிறப்பு மேற்பார்வைக் குழு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, கரூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் 

3,103.41 ஏக்கரில் சீமைக்கருவேல மரங்கள்  இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 இதுவரை 547.21 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 

இதில் மாயனூர் காவிரி ஆற்றுப் பகுதி, சிவாயம் பெருமாள் கோயில்பட்டி நல்லூர் ஆட்டாம்பட்டி , கூடலூர் ஞானமுத்து உடையான்  பண்ணப்பட்டி , ரெங்கநாதபுரம் வீரராக்கியம் ஆகிய குளங்கள் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நேரில்  ஆய்வு செய்யப்பட்டன.

 சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அ. செல்வம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, குளித்தலை சார் ஆட்சியர்  சேஷத்திரிமயம் தீபா சானு,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி வ. யுரேகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு. தனசேகரன், நீர்வள ஆதாரத்துறை உதவிச் செயற்பொறியாளர் து. கோபிகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்

Spread the love