
புதுடெல்லி: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச்சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 2,743 புள்ளிகள் சரிந்து, 78,543.73 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது. அதேபோல், நிஃப்டி 519 புள்ளிகள் சரிந்து 24,659.25-ஆக வீழ்ச்சி கண்டது.
வர்த்தக நேரத்தின் பாதியில், சென்செக்ஸ் ஓரளவு மீண்டாலும் இறுதியில் 1,048.34 புள்ளிகள் அல்லது 1.29% சரிந்து 80,238.85-ல் நிறைவுற்றது. நிஃப்டி 312.95 புள்ளிகள் அல்லது 1.24% குறைந்து 24,865.70-ல் நிலைகொண்டது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியின் காரணமாக முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.7.8 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.463.50 லட்சம் கோடியில் இருந்து ரூ.455.70 லட்சம் கோடியாகக் குறைந்தது. லார்சன் & டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, எடர்னல் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை சந்தை வீழ்ச்சியடைய முக்கிய காரணங்களாக அமைந்தன.

More Stories
தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!
2025-26 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி 8.25% ஆக நிர்ணயம்
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!