November 20, 2026

சென்னையில் 9 இடங்களில் ரூ.1,401 கோடியில் 6,157 வீடுகள் கட்ட திட்டம்: ஜனவரியில் பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல்

சென்னை: சென்​னை​யில் ரூ.1,401 கோடி​யில் 9 இடங்​களில் 6,157 புதியஅடுக்​குமாடி குடி​யிருப்​பு​கள் கட்​டப்​பட்ட உள்​ளன. இதற்​கான கட்​டு​மானப் பணிகள் ஜனவரி​யில் தொடங்​கவுள்​ள​தாக தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்பாட்டு வாரியம் மூலம் எளிய மக்​களுக்​கான வீட்டு வசதித்திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் சென்​னை​யில் 9 இடங்​களில் ரூ.1,401 கோடி​யில் 6,157 அடுக்​குமாடிக் குடி​யிருப்​பு​கள் கட்​டப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​திருந்த

​படி அனாதைக்​குப்​பம் 64 வீடுகள், வியாசர்​பாடி பழைய பிளாக் 1,158, பட்​டினப்​பாக்​கம் 1,484, ருக்​மணி நகர் 111, முல்லை நகர் 462, உதயசூரியன் நகர் 850, பச்​சைக்​கல் வீராசாமி தெரு 912, மேற்​குக் கல்​லறை சாலை 792, கக்​கன் காலனி 324 என மொத்​தம் 9 இடங்​களில் 6,157 வீடுகள் கட்​டப்​பட உள்​ளன.

இது​குறித்து தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய மேலாண்மை இயக்​குநர் பெ.ரமண சரஸ்வதி கூறிய​தாவது: இம்மாத இறுதிக்​குள் மக்​களை முழு​மையாக வெளியேற்​றி​விட்டு பழைய கட்​டிடங்​களை இடிக்​கும் பணி தொடங்​கும்.

ஜனவரி​யில் புதிய குடி​யிருப்​பு​களுக்​கான கட்​டு​மானப் பணி தொடங்​கப்​பட்டு, 20 மாதங்​களுக்​குள் நிறைவடையும்.

புதிதாகக் கட்​டப்​படும் ஒவ்​வொரு குடி​யிருப்​பும் 420 சதுர அடி​யில் ஒரு படுக்​கையறை (1BHK) வசதி கொண்​ட​தாக இருக்​கும்.

பழைய குடி​யிருப்​பு​கள் இடிக்​கப்​பட்டு அதே பகுதி​யில் புதிய வீடுகள் கட்​டப்​படும்​போது, ஏற்​கெனவே அங்கு வசித்து வந்த தகுதி​யான பயனாளி​களுக்கே முன்​னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்​கப்​படும். அவர்​கள் ரூ.1.50 லட்​சம் செலுத்த வேண்​டும். இங்கு பயனாளி​களுக்கு ஒதுக்​கப்​படும் வீடுகளை விற்​பனை செய்ய அனுமதி​யில்லை.

பட்​டினப்​பாக்​கம் புதிய குடி​யிருப்​புத் திட்​டத்​துக்​கும், புதிய தலை​மைச் செயலக இடத்​துக்​கும் எந்த தொடர்​பும் இல்லை. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love