February 13, 2026

சென்னை ஆராய்ச்சி மையத்தை ரூ.196 கோடியில் விரிவாக்கம் செய்கிறது மஹிந்திரா நிறுவனம்

சென்னை ஆராய்ச்சி மையத்தை ரூ.196 கோடியில் விரிவாக்கம் செய்கிறது மஹிந்திரா நிறுவனம்

புதுடெல்லி: சென்​னை​யில் உள்ள தனது ஆராய்ச்சி மற்​றும் மேம்பாட்டு மையத்தை ரூ.196 கோடி​யில் விரி​வாக்​கம் செய்ய உள்​ள​தாக மஹிந்​திரா அண்ட் மஹிந்​திரா நிறு​வனம் நேற்று தெரிவித்​தது.

இது குறித்து மஹிந்​திரா நிறு​வன வாக​னப் பிரிவுத் தலை​வர் ஆர்.வேலு​சாமி கூறிய​தாவது: “மஹிந்​திரா ரிசர்ச் வேலி மையத்தின் திறனை மேம்​படுத்​தும் நோக்​கில் ரூ.196 கோடி முதலீடு செய்​யப்பட உள்​ளது. இதன் மூலம் மேம்​பட்ட வாகன வடிவ​மைப்​பு, தயாரிப்​புப் பொறி​யியல் மற்​றும் எதிர்​காலத் தொழில்​நுட்ப மேம்​பாட்​டுப் பணி​களைத் துரிதப்​படுத்த திட்டமிடப்​பட்​டுள்​ளது.

ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுத் துறையை மேம்​படுத்​து​வதற்​கும், இந்​தி​யா​வில் தயாரிப்​போம் திட்​டத்​துக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்கும் வகை​யிலும் இந்த முதலீடு செய்​யப்பட உள்​ளது. நிறுவனத்​தின் பொறி​யியல் மற்​றும் சோதனைத் திறனை வலுப்படுத்​த​வும், ஆராய்ச்சி மற்​றும் கண்​டு​பிடிப்​பு​களுக்​கான ஒரு முக்​கிய மைய​மாக சென்னை திகழ்​வதை இந்த முதலீடு உறுதிப்படுத்​தும்.

இந்த விரி​வாக்க திட்​டப் பணி​கள் நடப்பு ஆண்​டுக்குள்​ளாகவே நிறைவடைந்​து, பயன்​பாட்​டுக்கு வரும். மேம்​பட்ட ஆராய்ச்சி மையம் மற்​றும் புதிய சோதனை உட்​கட்​டமைப்​பு​கள், பல்​வேறு வாக​னப் பிரிவு​களில் அடுத்த தலை​முறைக்​கான தளங்​களை உருவாக்க உதவும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Spread the love