May 29, 2026

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டை காலி செய்த எடப்பாடி பழனிசாமி – காரணம் என்ன?

அதிமுக தலைமையகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் புதிய வீட்டில் குடிபுகுந்தார் பழனிசாமி.முன்னதாக அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக கிரீன்வேஸ் சாலை அரசு பங்களாவில் வசித்து வந்தார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தை காலி செய்கிறார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தார். இதையடுத்து அவர் இதுவரை பயன்படுத்தி வந்த அரசு பங்களாவை விட்டு வெளியேறியுள்ளார்.

  

அந்த அரசு பங்களாவில், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த செவ்வந்தி பங்களாவில் இபிஎஸ் வசித்து வந்தார். தற்போது அவர் அதிமுக தலைமையகம் அமைந்துள்ள சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டுக்கு குடிபெயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அந்த புதிய வீட்டில் பால் நிகழ்வு இன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு எளிமையாக நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் மாற்றங்களுக்கிடையில், இபிஎஸ் தனது புதிய இல்ல வாழ்க்கையை தொடங்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேலும் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் கவனம் அதிகரித்துள்ளது.

Spread the love