
சென்னை: போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸார், சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலை, மெகாமார்ட் அருகே நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேத்துக்கிடமான முறையில் நின்றிருந்த விக்னேஸ்வரன் என்பவரை பிடித்து அவரிடமிருந்து மெத்தம்மெட்டமைன் போதை பொருளை கைப்பற்றினர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகள் வெங்கடேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக் ராஜா, யஸ்வந்த் ஆகியோரை பிடித்து அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் மெத்தம்மெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, மெத்தம்மெட்டமைனை அல்விபின்சா என்பவரிடம் இருந்து வாங்கியதாக கூறியதால், அல்விபின்சா என்பவரை கைது செய்து விசாரணை செய்த போது ஸ்ரீராம் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக கூறியதின் பேரில் ஸ்ரீராம் என்பவரை கைது செய்து அல்விபின்சா என்பவரின் தோழி வின்சிநிவேதா (துணை நடிகை) என்பவரையும் அவரது காதலன் தமீம் ரிஸ்வான் மற்றும் அவரது தோழி அஞ்சு கிருஷ்ணா (நடிகை) ஆகிய மூவரையும் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நடிகை அஞ்சு கிருஷ்ணா, மலையாள மற்றும் தமிழ் திரை உலகில் நன்கு அறியப்பட்டவர். பிரபலமான சீரியல் நடிகை. இவர் சமூக வலைதளங்களில் மிகவும் தீவிரமாக இருப்பவர். மாடலிங்கிலும் இருந்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது