October 8, 2026

சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சார்பில் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு கார் பரிசு

சென்னை: ஆசிய விளையாட்டு போட்டிகளில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 3 பதக்கங்களை வென்ற இந்திய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் அவரது திறமையான பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோரின் சாதனைகளை போற்றும் வகையில், சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் பிரம்மாண்டமான பாராட்டு விழா ஆவடி, வேலம்மாள் வித்யாலயா வளாகத்தில் நேற்று நடந்தது. தாளாளர் எம்.வி.எம்.வேல்மகன் தலைமை தாங்கினார். விழாவிற்கு வருகை தந்த வித்யா ராம்ராஜ், அவரது தாயார் மீனா ராம்ராஜ், பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்த வித்யா ராம்ராஜின் வெற்றிக்குப் பின்னால் அவரது விடாமுயற்சி, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சி முக்கியப் பங்காற்றியுள்ளது. அதேபோல், அவரது திறமையை சரியான முறையில் வழிநடத்தி, சர்வதேச சாதனையாளராக உருவாக்கியதில் அவரது பயிற்சியாளர் நேஹ்பால் சிங் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

அவர்களின் சிறப்பான சாதனைகளைப் பாராட்டும் விதமாகவும், அவர்களின் உழைப்பிற்கு உரிய மரியாதை செலுத்தும் வகையிலும், வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சார்பில் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் வித்யா ராம்ராஜிற்கும், அவரது பயிற்சியாளர் நேஹ்பால் சிங்கிற்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கினார்.விழாவில் வேலம்மாள் நெக்ஸஸ் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பேசியதாவது: வித்யா ராம்ராஜின் சாதனையை பெருமையுடன் பாராட்டியதுடன், அவரது வெற்றிப் பயணத்தில் உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் நேஹ்பால் சிங் அவர்களின் பங்களிப்பையும் சிறப்பித்தது.

வித்யா ராம்ராஜின் சாதனை, இளம் தலைமுறையினருக்கு விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் உலக அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அவரது சாதனை, விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக விளங்குகிறது.வேலம்மாள் நெக்ஸஸ், கல்வியுடன் இணைந்து விளையாட்டுத் திறமைகளையும் ஊக்குவித்து, மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்புகளையும், பயிற்சி வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது, என தெரிவித்தார்.

Spread the love