
புதுடெல்லி: இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தலைவர் விவேக் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் செய்தித்தாள் காகிதத் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக உள்ளது.
ஆனால், உள்நாட்டில் இதன் உற்பத்தி 5 லட்சம் டன்னை தாண்ட முடியாமல் திணறி வருகிறது. இதன் மூலம் மொத்த செய்தித் தாள் காகிதத்துக்கான தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே நம்மால் ஈடு செய்ய முடிகிறது.
கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக இந்த இடைவெளி நீடித்து வருகிறது. செய்தித்தாள் காகித உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ அல்லது விரிவாக்கம் செய்யவோ எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே, செய்தித்தாள் காகிதங்கள் இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 5% சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
டெல்லி: தலைநகர் டெல்லியில, ஆறு நாள் ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற 2 பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை
அயோத்தி ராமர் கோயிலால் பொருளாதார மறுமலர்ச்சி: 2024-ல் 11 கோடியாக உயர்ந்த பக்தர்கள் எண்ணிக்கை