சோழவந்தான் மே 27
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாயாண்டி சாமி மற்றும் ஸ்ரீ முனியாண்டி சுவாமி அம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ஸ்ரீ சோனை சாமி கோவில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதளுடன் தொடங்கியது இந்த நிலையில் நேற்று இரவு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இரவு இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து சக்தி கிரகம் எடுத்து ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது தொடர்ந்து இன்று காலை முளைப்பாரி ஊர்வலம் இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது தொடர்ந்து மாயாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாலகிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்

More Stories
சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா:
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து – 2 பேர் உயிரிழப்பு
பள்ளிக்கு மாணவர்கள் பைக் ஓட்டி வந்தால் இதுதான் தண்டனை.. தமிழக அரசு வெளியிட்ட புதிய உத்தரவு -எச்சரிக்கை