சோழவந்தான் மார்ச் 20
மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் கோவில் 50 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவில் பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு சிறப்பு வாய்ந்ததாக 50 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது முன்னதாக
கருடன் படம் பொருந்திய கொடியை சுமந்து அர்ச்சகர் பார்த்தசாரதி சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக கேரளா செண்டை மேளம் முழங்க ஊர்வலத்தில் வந்தனர் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டர் பட்டர்கள் ஜெகநாதன் பிரகாஷ் மோகன் முத்துகிருஷ்ணன் முத்து நாராயணன் ஆகியோர் வேத பாராயணங்கள் முழங்க நாதஸ்வர மேள வாத்தியத்துடன் கோயில் கொடி மரத்தில் பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது முக்கிய திருவிழாவாக மார்ச் 24 ம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டு பல்லக்கு நிகழ்ச்சியும் மார்ச் 25ம் தேதி திருக்கல்யாண சுப வைபோக விழாவும் கோலாலமாக நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி இராம நவமி 28ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற்று 29ஆம் தேதி நிறைவு நிகழ்ச்சியான விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது இந்த பிரம்மோற்சவ விழாவில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் வருகை தந்து பெரு மாலை வழிபட்டு செல்வர் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை உபயதாரர் சோழவந்தான் முதலியார் கோட்டை சி கன்னியப்ப முதலியார் குடும்பத்தார்கள் மற்றும் சுரேஷ் உகந்தாச்சிய பிள்ளை கோயில் செயல் அலுவலர் தாரணி கணக்கர்முரளிதரன் அர்ச்சகர் பார்த்தசாரதி ஆலய பணியாளர்கள் ஊழியர்கள் செய்து வருகின்றனர் திருவிழா காலங்களில் தினமும் மாலை சக்கரத்தாழ்வார் புறப்பாடு நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சி தொடர்ந்து மாலை அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலிக்க பட்டிருந்தது

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி