மேட்டூர்: டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில், மேட்டூரில் 3 தனியார் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக மின் வாரியத்தில் டிராஸ்ஃபார்மருக்கு தேவையான மின்கடத்தி கொள்முதலில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மேட்டூர் அருகே சிட்கோ, குஞ்சாண்டியூர், கோனூர் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் கண்டக்டர்ஸ் நிறுவனங்களில் இருந்து டிரான்ஸ்ஃபார்மருக்கு தேவையான பொருட்கள் கடந்த ஆட்சி காலத்தில் விநியோகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த 3 நிறுவனங்களில் இன்று காலை முதல் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தனியார் நிறுவனங்களிலும் காவல் ஆய்வாளர்கள் நரேந்திரன், நல்லாம்மாள், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் இன்று காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சோதனையில் நிறுவனங்களில் ஆன்லைன் பணப் பரிமாற்றம், ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதோடு, கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், சோதனை மாலை வரை நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.

More Stories
“தலைநகர் சென்னையில் பொதுமக்கள் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?” – வேல்முருகன் கேள்வி
தென்மாநில முதல்வர்கள் மாநாடு: அமித் ஷா வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து
“ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.7 ஆக உயர்த்த வேண்டும்” – அன்புமணி