புதுடெல்லி: தெற்கு டெல்லியின் சத்ய நிகேதனில் ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்தனர். இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில், மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த விபத்தின்போது, டெல்லி பல்கலைக்கழகத்தில், 2-ம் ஆண்டு பி.காம் படித்து வரும் நிதேஷ் சிப் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரு மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். உடனடியாக, நிதேஷ் சிப்பின் நண்பர் தங்களுடைய இருப்பிடத்தை நண்பர்களுக்கு தனது வாட்ஸ்-அப்-பில் ‘லைவ் லொகேஷன்’ ஆக அனுப்பி உதவி கோரினர், அதன்மூலம், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

More Stories
‘டொனால்ட் ட்ரம்ப் திமுக-வை காப்பி அடித்துள்ளார்’ – ஸ்ரீதர் வேம்பு
காட்பாடி அருகே தேவாலயம் கட்டுமான பணியில் சாரம் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
டெல்லியில் நாளை பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்பது உறுதி